கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்
2025ம் ஆண்டிற்கான அரச கடமைகளை ஆரம்பித்தல்.
கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் அரச கடமைகளை ஆரம்பித்தல் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று 01.01.2025 காலை 8.30 மணிக்கு திணைக்கள வளாகத்தில் திணைக்கள கௌரவ பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, தேசிய நலன், அபிவிருத்தி, முன்மாதிரியாக செயற்படல் மற்றும். கூட்டுப் பொறுப்பு என்பனவற்றினூடாக மாற்றத்ததைக் ஏற்படுத்தல் என்ற நோக்கத்தினை மையப்படுத்தி இன்றைய கடமை ஆரம்ப நாள் அமையப் பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்காகவும் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட க்ளீன் சிறி லங்கா வேலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது
இந் நிகழ்வில் இந்து மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உட்பட அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Commencement of Duties for 2025 at the Department of Muslim Religious and Cultural Affairs
The Department of Muslim Religious and Cultural Affairs officially commenced its duties for 2025 under the theme “Clean Sri Lanka” as part of the national program.
The program began with the hoisting of the National Flag and the singing of the National Anthem on 1st January 2025 at 8:30 a.m. on the department premises, under the leadership of the Director, M.S.M. Nawas.
The event emphasized key values such as social harmony, unity, national interest, development, and the importance of collective responsibility in fostering meaningful change. It also underscored the department’s dedication to being a role model in public service.
A two-minute silence was observed to honor those who sacrificed their lives for the country.
As instructed by the Presidential Secretariat, the department staff participated in the Government Service Oath ceremony, which was broadcast live as part of the national program.
The event was graced by the presence of officials, including the Directors of the Department of Hindu Religious and Cultural Affairs and the Department of Christian Religious and Cultural Affairs, reflecting interfaith unity and collaboration.