பதிவுசெய்யப்பட்ட ஹஜ் பயண முகவர்களின் பட்டியல் – 2022

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இதுவரை 73 ஹஜ் பயண முகவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதனை அறியத்தருகின்றேன். அவர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் இலங்கையிலிருந்து ஹஜ் செய்ய விரும்பும் அனைத்து ஹஜ்ஜாஜிகளும், கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட ஹஜ் பயண முகவர்களை மாத்திரம் தொடர்பு கொண்டு ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், கீழேயுள்ள பட்டியலில் உள்ளடங்காத பயண முகவர்களுடன் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் திணைக்களம் பொறுப்பேற்காது என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன், பதிவு செய்யப்படாத பயண முகவர்களினால் ஏமாற்றப்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும், இவ்வருடம் ஹஜ் செய்ய விரும்பும் ஹஜ்ஜாஜிகள் அனைவரையும் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

மேலதிக விபரங்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஹஜ் பிரிவுடன் தொடர்பு கொள்ளவும்.

முகவர் பட்டியல்: https://muslimaffairs.gov.lk/wp-content/uploads/2022/06/Registered-Hajj-Operator-2022-2.pdf

 

இப்ராஹிம் அன்ஸார்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்