ரானிய தூதுக்குழுவின் வருகை- 07 பிப்ரவரி 2022
ரானிய தூதுக்குழுவின் வருகை- 07 பிப்ரவரி 2022
ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் திரு. ஹதம் பூரி தலைமையிலான ஈரானிய தூதுக்குழு, முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார் அவர்களை 07 பெப்ரவரி 2022 திங்கட்கிழமை முஸ்லிம் திணைக்களத்தில் சந்தித்தது.
ஈரானிய தூதுக்குழுவில் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் முஸ்தபா பல்கலைக்கழகத்தின் தலைவர் திரு. மிர்பதேமி மற்றும் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தின் கலாச்சார ஆலோசகர் டாக்டர் பஹ்மான், முஸாமில் ஆகியோரும் இருந்தனர்.
இக்கலந்துரையாடலில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான திரு.அன்வர் அலி மற்றும் திரு.அலா அஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.