கொழும்பில் உள்ள பாலஸ்தீன் நாட்டின் தூதுவர் அவர்களின் வருகை

கொழும்பில் உள்ள பாலஸ்தீன் நாட்டின் தூதுவர் அவர்களின் வருகை

இலங்கைக்கான பாலஸ்தீன நாட்டின் தூதுவர் அதிமேதகு சுஹைர் ஹம்தல்லாஹ் சைட் அவர்கள், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார் அவர்களை 09 பெப்ரவரி 2022 புதன்கிழமை அன்று முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் சூடான மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான திரு.அன்வர் அலி மற்றும் திரு.அலா அஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.