கோவிட் 19 அவசர எதிர் நடவடிக்கை

28.11.2020

அனைத்து பள்ளிவாயல் நம்பிக்கை பொறுப்பாளர்கள்/நம்பிக்கையாளர்கள் மற்றும் இமாம்கள் அனைவருக்கும்

கோவிட் 19 அவசர எதிர் நடவடிக்கை

கோவிட் -19 இன் இரண்டாவது அலை நாடு பூராகவும் பரவிக்கொண்டிருக்கிறது. கிழக்கில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளும், உள்நாட்டிள் வேறு சில பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

சுகாதார விதிமுறைகள் மற்றும் நோய் பரிசோதனை செயல்முறைகளை பின்பற்றுவதிலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதிலும் குறைபாடுகள் காணப்படுவதாக சில பகுதிகளிலிருந்து அறியக்கிடைத்துள்ளன. அப்படியானால், அதுவே பலரின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

எனவே, நம்பிக்கை பொறுப்பாளர்கள் மற்றும் இமாம்கள், சுகாதார அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுதலின் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்காக, ஒலிபெருக்கியில் அறிவித்தல் வழங்குதல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.

இலங்கையின் வக்ப் சபையின் அறிவுறுத்தலுக்கமைய.

ஏ.பி. எம். அஷ்ரப்
வக்ப் சபை பணிப்பாளர் மற்றும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்.