அஸ்ஸலாமு அலைக்கும்.

இலங்கை ஹஜ்ஜாஜியான, N9593442 எனும் இலக்க கடவுச்சீட்டினைக் கொண்ட ஜனாப் மொஹமட் ஹம்சா அஹமட் மஸ்லூல் அவர்கள் நேற்று இரவு மினாவில் மரணித்துள்ளார்கள் என்பதனை மிகவும் கவலையுடன் அறியத்தருகின்றோம்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

காலியைச் சேர்ந்த அவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காக்கியா ஹஜ் பயண முகவர் குழுவுடன் இணைக்கப்பட்ட சஃப்ரா ஹஜ் பயண முகவர் குழுவுடன் ஹஜ் யாத்திரைக்காக மக்கா சென்றிருந்தார்.

ஜித்தாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஹஜ் பயண முகவர் குழுவின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று மினாவில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.

ஊடகப் பிரிவு,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
கொழும்பு-10.