அரசின் 5 -16 வயதுக்குட்பட்ட கட்டாய கல்வி வழங்கல் கொள்கைக்கு அமைய அரபு கல்லூரிகளில் கட்டாய கல்வி வழங்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
அரசின் 5 -16 வயதுக்குட்பட்ட கட்டாய கல்வி வழங்கல் கொள்கைக்கு அமைய அரபு கல்லூரிகளில் கட்டாய கல்வி வழங்கல் கொள்கையை எவ்வாறு நடைமுறை படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு , புத்தசாசண மற்றும் சமய விவகார ,கலாசார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கள ஆய்வு மற்றும் தகவல் திரட்டு தொடர்பாக அதிக அரபுக் கல்லூரிகள் காணப்படும் கிழக்கு மாகாணத்தை மாதிரியாக கருதி திருகோணமலை ,அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட செயலகங்களில் 2022/01/20,21 ஆகிய தினங்களில் செயலமர்வுகள் நடைபெற்றன.
இச் செயலமர்வுகளில் கல்வி அமைச்சரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ராதா நானயக்கார, மாவட்ட செயலாளர்கள், மேலதிக மாவட்ட செயலாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களதின் பணிப்பாளர் ஜனாப் இப்றாஹிம் அன்சார் , கல்வி அமைச்சின் முறைசாரா கல்வி பிரிவின் பணிப்பாளர் திரு.முனிதாச, பிரதிப் பணிப்பாளர் திரு.குமார மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் , கிழக்கு மாகாணங்கன கல்வி திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்கள் , முறைசாரா கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் , பொலிஸ் அதிகாரிகள், மு.ச.ப.அ.திணைக்களதின் அரபு கல்லூரிகள் தொடர்பாக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ,கிழக்கு மாகாண மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கள உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் மற்றும் அரபு கல்லூரிகள் பொறுப்பாளா்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




