வரலாறு

வரலாறு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வரலாறானது வக்ப் அல்லது முஸ்லிம் அறக்கட்டளைகளின் சட்ட வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது. 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்பு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் குறித்த சட்டமானது 1931 ஆம் ஆண்டின் முஸ்லிம்களின் வாரிசுரிமைச் சட்டம் மற்றும் வக்ப் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. வக்பு என்பது ஒரு முஸ்லிம் அறக்கட்டளையாக இருந்ததால், பள்ளிவாயல்கள் மற்றும் வக்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் பொது நம்பிக்கையாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டனஇ அவரது எல்லைக்குள் அவை இலங்கையில் நிர்வகிக்கப்பட்டன.

1952 ஆம் ஆண்டு, அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் முழுக் கேள்வியையும் புதிதாக ஆய்வு செய்யவும், பரிந்துரைகளைப் பெறவும், பள்ளிவாயல்களை பதிவு செய்வதற்கான சட்டத்தை பரிந்துரைப்பதற்கும், பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைகள் அல்லது வக்புகளின் நம்பிக்கையாளர்களின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை பரிந்துரை செய்வதற்கும் இரு அவைகளிலும் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை) முஸ்லிம் உறுப்பிணர்களை கொண்ட குழுவை நியமித்தார்.

தற்போதுள்ள கட்டளைச் சட்டத்தை திருத்துவது தொடர்பாக முஸ்லிம் பொது மக்களின் கருத்துக்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அழைப்பு விடுத்;துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பல சட்டத்தரணிகள் இவ்விடயத்தை கையாள்வதற்கும் பரிந்துரைகளை செய்வதற்கும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இக்குழுவானது எட்டு அமர்வுகளை நடத்தியதுடன், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை விரிவாக கலந்துரையாடியுள்ளனர். ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதுடன் ஒப்பந்தத்தின் பின்னிணைப்பு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை வரைவுச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டன.

1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்புகள் சட்டமானது 1956 ஏப்ரல் 26 ஆம் திகதிய 11, 112 ஆம் இலக்க இலங்கை அரச வர்த்தமானப் பத்திரிகை மூலம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1957 மே 01 முதல் அமுலுக்கு வந்தது. பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைகளுக்கான முதலாவது ஆணையாளராக திரு. எம்.ஜே.எம். முஹ்சின் ஊஊளுஇ அவர்கள் 1957 ஜூன் 28 ஆம் திகதிய, 11, 137 இலக்க வர்த்தமானப் பத்திரிகை மூலம் பதில் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்.

————வரலாறு தொடரும்——————–