அறிமுகம்
அறிமுகம்
ஹஜ் என்பது சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகருக்கு உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமாகும். இது உலகின் மிகப் பெரிய வருடாந்த யாத்திரையாகும்.
ஹஜ் இஸ்லாத்தின் ஐந்தாவது தூண். வசதிபடைத்த மற்றும் உடல் வலிமையுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு முறையாவது செய்ய வேண்டிய ஒரு மதக் கடமையாகும். உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை ஹஜ் வெளிப்படுத்துகிறது. இது கடவுளுக்கு (அறபு மொழியில் அல்லாஹ் எனப்படும்) மனிதர்களின் உலகளாவிய சமர்ப்பிப்பைக் குறிக்கிறது.
துல்ஹஜ் மாதத்தின், அதாவது இஸ்லாமிய நாட்காட்டியின் 12 ஆவது மாதம், 08 ஆம் நாள் தொடக்கம் 12 ஆம் நாள் வரை ஹஜ் யாத்திரை நடைபெறுகிறது. ஒரு வாரத்திற்கும் குறைவான
ஹஜ் கடமையின் அடிப்படை படித்தரங்கள்,
• உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து யாத்ரீகர்களும் ஒரே நேரத்தில் மக்கா நகரில் ஒன்றினைவதன் மூலம் ஆரம்பிக்கின்றது
• முதலாம் நாளில், ஒவ்வொருவரும் கடிகார திசைக்கு எதிர் திசையில் (இடப்பக்கமாக) முஸ்லிம்கள் தொழுகை நடாத்தும் திசையான கிப்லா எனப்படும் கஃபாவை சுற்றி ஏழு முறை நடந்து வருவார்கள். இந்து விருவிருப்பான அமர்வின்போது சில இடங்களில் குறிப்பிட்ட சில பிரார்த்தனைகளை செய்வார்கள்.
• பிறகு சபா மற்றும் மர்வா (இவை தற்போது விரிவாக்கப்பட்டுள்ள பள்ளிவாயலுக்கு உள்ளேயே காணப்படுகின்றன) எனப்படும் இரு மலைகளுக்கிடையே விருவிருப்பான நடை (தொங்கோட்டம்) மேற்கொள்ளப்படும்.
• ஸம் ஸம் எனப்படும் வற்றாத கிணற்றிலிருந்து சிறிது தண்ணீர் குடிப்பது
• அதன் பறகு யாத்ரீகர்கள் அரபா மலைப் பகுதியை அடைந்து அங்கு பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்காக பல கிலோமீற்றர்கள் பயணம் செய்வார்கள்.
• அதனைத் தொடர்ந்து அக்குழு கல் எறிவதற்காக ஒரு அரங்கிற்கு வரிசையாக நடந்து செல்வார்கள்.
• பின்னர் யாத்ரீகர்கள் தமது தலைகளை மொட்டையடித்துக்கொள்வார்கள்.
• சமய ரீதியிலான விலங்குகளை அறுத்துப் பழியிடல்கள் நடைபெறும்.
• இறுதியாக நான்காவது நாள் உலகப் பண்டிகையான ஈதுல் அழ்ஹாவை கொண்டாடுவார்கள்
இஸ்லாமிய புனித யாத்திரிகையில் பங்கேற்பதன் நீண்ட கால விளைவுகள் குறித்து 2008 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் ஹஜ் அனுபவத்திற்குப் பின்னர் முஸ்லிம் சமூகங்கள் மிகவும் திறந்த நிலைக்கு மாறிவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் ஜோன் எப். கென்னெடி அரச பாடசாலையுடன் இணைந்து மேற்கொண்ட ஹஜ் பயணத்தின் தாக்கத்தை மதிப்பிடுதல் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொறு ஆய்வான ‘இஸ்லாத்தின் உலகளாவிய கூட்டத்தில் மதம் மற்றும் சகிப்புத்தன்மை’ என்ற ஆய்வில், ஹஜ் அனுபவமானது இஸ்லாமிய சமூகத்திற்குள் மட்டுமல்லாது பிற மதத்தினரிடையேயும் அமைதியான சகவாழ்வு, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றது.
ஹஜ் செயல்பாட்டில் அரசாங்கத்தின் ஈடுபாடு நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். இஸ்லாமிய நாடுகள் முழு செயல்முறையையும் ஒழுங்குபடுத்தும்போது, ஏனைய நாடுகள் மானியங்கள் அல்லது ஒழுங்கு செய்யப்பட்ட பிற உதவிகள் மூலம் உதவுகின்றன.
இந்துநேசியாவில், மக்காவுக்கான ஹஜ் ஏற்பாடுகளுக்கான முழு உரிமையையும் அரசாங்கம் எடுத்துககொள்கிறது. புனித யாத்திரிகையின் போது யாத்ரீகர்களுக்கு வழிகாட்டுதல், சேவைகளை வழங்குதல் மற்றும் பாதுகாப்பினை வழங்குதல் போன்றவற்றுக்கு சமய அலுவல்கள் அமைச்சு பொறுப்பு என சட்டம் குறிப்பிடுகின்றது. ஹஜ் பயணத்துடன் தொடர்புடைய செலவுகளையும் அமைச்சு தீர்மானித்து ஹஜ் கடவுச் சீட்டினை வழங்கும்.
இந்தியாவில், அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள் மூலம் முழு செயல்முறையையும் தேசிய ஹஜ் குழு ஒழுங்குபடுத்துகிறது. இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்கும் யாத்ரீகர்களுக்கு சலுகைக் கட்டணம் வழங்கப்படுகிறது. ‘எயா இந்தியா’ நிறுவனத்திற்கு அரசாங்கம் மானியம் வழங்குகிறது.
இலங்கையில், நியமிக்கப்பட்ட ஹஜ் குழு மூலமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலமும் இச்செயல்முறையை அரசாங்கம் மேற்கொள்கின்றது. இலங்கை அரசாங்கம் பின்வரும் வழிகளில் முஸ்லிம் சமூகத்திற்கு உதவுகின்றது:
• இலங்கை முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹஜ் வீசாக்களின் எண்ணிக்கை தொடர்பாக சவுதி அரேபியக் குடியரசுடன் பேச்சுவார்த்தை நடாத்துதல்
• ஹஜ் யாத்திரிகைக்கு செல்ல விரும்புகின்ற முஸ்லிம்களை பதிவு செய்தல்
• ஹஜ் முகவர் நிலையங்களை பதிவு செய்தல்
• ஹஜ் முகவர் நிலையங்களது செயற்திறன்ஃநற்சான்றிதழ்கள் அடிப்படையில் யாத்திரை வீசாக்களை ஒவ்வொரு ஹஜ் முகவர் நிலையங்களுக்கும் பகிர்ந்தளித்தல்
• முழு ஹஜ் செயல்முறையையும் ஆரம்பம் முதல் இறுதி வரை கண்காணித்தல்
• இலங்கை ஹஜ் யாத்ரீகர்களின் சுகாதாராத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கை மருத்துவக் குழுக்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்புதல்