ஹஜ்/உம்றா குழு
ஹஜ் குழுவானது பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருக்கும். இக்குழுவானது ஹஜ் யாத்ரீகர்களை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து சேவைகளும் திருப்திகரமாக நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்கிறது. எவ்வாறாயினும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தானாகவே ஹஜ் குழுவின் உறுப்பினராகிவிடுவார்.
ஹஜ் குழுவின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
• குழுவின் பதவிக்காலம் ஒரு வருடமாகும்
• ஹஜ் குழுவில் வெற்றிடமாகும் எந்த இடத்தையும் பொறுப்பான அமைச்சர் நிரப்புவார்
• ஹஜ் குழு உறுப்பினர் ஒருவர் ஹஜ் குழு தலைவருக்கு மற்றும் பொறுப்பான அமைச்சருக்கு ஒரு மாத முன்னறிவிப்பு செய்ததன் பின்னர் தனது பதவியை இராஜனாமா செய்யலாம்
கடமைகள்
• ஹஜ் குழு இலங்கை யாத்ரீகர்களுக்கு நியாயமானளவு ஒதுக்கீடுகளை (கோட்டாக்களை) பெற்றுக்கொள்வதற்காக சவுதி அரேபிய குடியரசின் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தும்
• ஓவ்வொரு யாத்ரீகரிடமும் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கட்டணத்திற்கு முழு சேவையும், முக்கியமாக சரியான நேரத்தில் போக்குவரத்து வசதிகள் மற்றும் மினா தங்குமிடங்கள், வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் ( முஅஸ்ஸஸா, ஒன்றினைந்த முகவர்கள போன்றோருடன்) தொடர்பு கொள்ளும்.
• ‘பேஸ்ஸா’ எனப்படும் சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டு என்பது சவுதி அரபிக் குடியரசு இலங்கைக்கு வழங்கும் சலுகை விசாக்களாகும். குறைந்த பட்சம் 45 யாத்ரீகர்களை கொண்ட ஒவ்வொரு ஹஜ் முகவர்களுக்கும் ஒரு சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். ஹஜ் முகவர்களுக்கு ஒதுக்கப்படும் மேலதிக ஒவ்வொரு 45 யாத்ரீகர்களுக்கும் மேலதிக சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டு ஒன்றினை பெற்றுக்கொள்வாதர்கள். உதாரணமாக 45 யாத்ரீகர்களுக்கு 1, 90 யாத்ரீகர்களுக்கு 2, 135 யாத்ரீகர்களுக்கு 3 என்ற ஒழுங்கில் பெற்றுக்கொள்வார்கள். எவ்வாறாயினும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மேலதிக சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டுக்கள வழங்குவதற்கு ஹஜ் குழுவுக்கு விருப்புரிமை உண்டு. எஞ்சிய ‘பேஸ்ஸா’ எனப்படும் சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டுக்கள் மருத்துவ மற்றும் நிர்வாக தன்னாவலர்களுக்கு வழங்கப்படும். இந்நபர்கள் ஹஜ் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுகோலொன்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
• ஹஜ் குழுவானது ஹஜ் முகவர்களை மதிப்பீடு செய்து பொருத்தமான முறையில் சேவை வழங்குவதற்கு தகுந்த முகவர்களுகளை சான்றுப்படுத்தும்.
• இந்த நோக்கத்திற்காக, முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஹஜ் முகவர்களை மதிப்பிடுவதற்கு ஒரு விஷேட சுயாதீன குழுவொன்றை நியமிக்கும். அதன் பின்னர், அக்குழு தமது பரிந்துரைகளை இறுதி முடிவுக்காக ஹஜ் குழுவிற்கு வழங்கும்.
• யாத்ரீகர்களுக்கான கட்டணத்தை குறைப்பதற்காக ஹஜ் காலத்திற்கான விமானச்சீட்டுக்களின் விலை தொடர்பாக விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துதல்.
ஹஜ் முகவர் நிலையங்களின் தரக் கட்டுப்பாடு
• சமய ரீதியான வழிகாட்டல் நிகழ்ச்சிகள் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சமய நிறுவனத்தால் வழங்கப்படுவதை ஹஜ் குழு உறுதி செய்தல் வேண்டும்.
• ஒரு மௌலவி ஹஜ் முகவர் நிலையத்தில் கடமையாற்றுவதற்கான நுழைவுத் தகுதியாக இது காணப்படும்.
• ஒவ்வொரு ஹஜ் முகவர் நிலையமும் குறைந்தபட்சம் திருப்திகரமான சேவையை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஹஜ் யாத்ரீகர்களுடனும் கையொப்பமிட வேண்டிய ஒப்பந்தத்தின் பிரதியொன்றை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
• சவுதி அரேபியக் குடியரசில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு திருப்திகரமான சேவை வழங்கப்படுவதனை உறுதி செய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது முகவர்களின் சேவைத் தரங்களை அவதானிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் ஹஜ் காலப்பகுதியில் சில உத்தியோகத்தர்களை அனுப்புகின்றது. அவர்கள் யாத்ரீகர்களுடனு; அங்கு உரையாடுவார்கள்.
• வீசா வழங்கும்போது, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமான தமது பரிசீலனை சேவைகள் தொடர்பாகவும் அவசரத் தேவைகளுக்காக தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பிலக்கங்கள் தொடர்பாகவும் யாத்ரீகர்களுக்கு அறிவிக்கும்.
• ஒரு ஹஜ் முகவர் நிலையத்திற்கு விதிக்கப்படும் தண்டனைகளில் பின்வருவன உள்ளடங்கும்:
1. எச்சரிக்கைஃகடுமையான எச்சரிக்கை
2. இடைநீக்கம்
3. இரத்துச் செய்தல்
4. விசாரணைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஏனைய தண்டனைகள்.
ஹஜ் பயணத்தின் பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் சுயாதீன விசாரணை குழுவொன்றினை ஹஜ் குழு நியமிக்கும். குழுவின் தீர்ப்பு உண்மைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான போதுமான ஆய்வுக்குப் பின்னர் இறுதி முடிவுக்காக ஹஜ் குழுவிடம் ஒப்படைக்கப்படும். பரிந்துரைகளில் பின்வருவன உள்ளடங்கும்:
1. குற்றத்தின் மீதான தீர்ப்பு – செல்லுபடியானது அல்லது செல்லுபடியற்றது
2. குற்றத்தின் ஈர்ப்பு
3. குற்றத்தின் தன்மை அடிப்படையிலான தண்டனை
• முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது ஒவ்வொரு ஹஜ் முகவர் நிலையத்துடனும் தொடர்பற்ற 05 யாத்ரீகர்களை எழுமாறாக தேர்ந்தெடுத்து ஹஜ் முகவர்களது சேவைகள் தொடர்பாக எழுத்து மூல கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அவர்களை வேண்டிக்கொள்ளும்.
• அதற்கு மேலதிகமாக, ஹஜ் முடிவடைந்து ஒரு மாதத்திற்கு பின்னர் ஹஜ் முகவர்களால் வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பாக மதிப்பீடு செய்வதற்காக ஹஜ் குழு யாத்ரீகர்களிடமிருந்து கருத்துக்களை பெறும்.
• சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப தவறு செய்த ஹஜ் முகவர்களுக்கு எதிராக ஹஜ் குழு கடும் நடவடிக்கை எடுக்கும். எச்சரிக்கை, பண அபராதம், இடைநிறுத்தம் மற்றும் இரத்துச் செய்தல் என தண்டனைகள் உள்ளடங்கும்.
• விசாரணை குழுவால் பரிந்துரைக்கப்படும் ஏனைய பரிந்துரைகள்.
• தண்டனைகள் பற்றியும் அவற்றை ஹஜ் யாத்திரிகை முடிந்து மூன்று மாதத்திற்குள் நிறைவேற்றுவது பற்றியும் ஹஜ் முகவர்களுக்கு ஹஜ் குழு அறிவிக்கும்.
• ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்ட மற்றும் தண்டனைகள் விதிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள் ஹஜ் குழுவிடம் மேன்முறையீடு செய்ய உரிமை உண்டு, அவர்களது முடிவு இறுதியானதாக இருக்கும்.
கட்டணங்கள் மற்றும் நிதி முகாமைத்துவம்
1. ஒவ்வொரு ஹஜ் முகவர் நலையமும்; நிர்வாக செலவினங்களுக்காகவும் ஏனைய வசதிகளை வழங்குவதற்காகவும் ஒரு யாத்ரீகருக்கு குறைந்த பட்சம் ரூ. 2000.00 வீதம் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
2. யாத்திரைக்கு பின்னர், அனைத்து உரிமைக்கோரல்களும் நிலுவைகளும் இக்கட்டணத்தை பயன்படுத்தி தீர்க்கப்படும்.
3. ஹஜ் குழுவினால் பெறப்படும் பதிவுக்கட்டணங்கள், நன்கொடைகள் மற்றும் ஏனைய வருமானங்கள் ஹஜ் கணக்கு எனப்படும் அரச திணைக்கள வங்கிக் கணக்கில் பராமரிக்கப்படும்.
4. யாத்ரீகர்களுக்கான சேவைகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்குமாக நிதியை பாதுகாப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான முழுப் பொறுப்பையும் ஹஜ் குழு மேற்கொள்ளும்.
5. எஞ்சியிருக்கும் நிதியின் சில பகுதிகள் தேவைப்படும் சமூகத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.
6. ஹஜ் குழு அனைத்து கணக்குகளுக்குமான வருடாந்த கணக்காய்வொன்றை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கும்.
ஏனையவை
1. அனைத்து யாத்ரீகர்களுக்கும் இலங்கை மற்றும் சவுதி அரேபிய விமான நிலையங்களில் உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும்.
2. ஹஜ் முகவர்களால் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகள் ஹஜ் குழுவின் குழுவினரால் கண்காணிக்கப்பட வேண்டும்.
3. ஹஜ் குழு ஜித்தாவிலுள்ள தூதரகத்தில் உதவியுடன் பிரதான நகரங்களான மக்கா, மதீனா போன்ற இடங்களில் பிரதிநிதி அலுவலகங்களை அமைப்பதோடு அதன் இடங்கள் தொடர்பாக பரவலாக அறிவிக்கும். ஹஜ் யாத்திரையின்போது இச்சேவையை வழங்குவதற்காக சவுதி அரேபியாவிலிருந்து தன்னாவலர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
4. ஹஜ் குழு ஒரு மருத்துவக் குழுவை உருவாக்கும். அக்குழுவானது, இலங்கை யாத்ரீகர்களின் முதல் தொகுதியினர் சவுதிக்கு செல்வதற்கு 2-3 நாட்களுக்கு முன்னர் சென்று கடைசியா நாடு திரும்பும் யாத்ரீகர்களுடன் நாட்டுக்கு வருவார்கள்.
5. மக்கா, மதீனா, அரபா, மினா மற்றும் முஸ்தலிபா போன்ற இடங்களில் இலங்கை யாத்ரீகர்கள் தங்கும் அனைத்து தங்குமிடங்களிலும் இலங்கை தேசிய கொடி தொங்கவிடப்பட்டிருப்பதை உறுதி செய்தல்.
6. போக்குவரத்து வசதிகள் – ஹஜ் குழுவானது முஅஸ்ஸஸா, ஒன்றினைந்த முகவர்கள் ( அத்னான் அமீன் ஹாதிப்) போன்ற சவதி அரேபியா, ஹஜ் அதிகாரிகள் போன்றவர்களுடன் குறிப்பாக போக்குவரத்து மற்றும் மினா தங்குமிட வசதிகள் தொடர்பாக பூரணமான சேவையை வழங்கு வலியுறுத்துவர்.
7. பல இலங்கை யாத்ரீகர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் கஃபதுல்லாங்வுக்கு அருகில் மருத்துவ குழுவொன்றை நிறுவுதல்.
ஹஜ் குழு உறுப்பினர்கள்: