வக்புகள்
• 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்பு சட்டம்
• 1962 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்பு சட்டம்
• 1982 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்பு சட்டம்
1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்புகள் சட்டமானது 1956 ஏப்ரல் 26 ஆம் திகதிய 11, 112 ஆம் இலக்க இலங்கை அரச வர்த்தமானப் பத்திரிகை மூலம் நிறைவேற்றப்பட்டது.
1958 ஆம் ஆண்டு, சட்டம் இயற்றப்பட்டு சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதனை அமுல்படுத்துவதில் சில சிக்கல்கள் காணப்பட்டதால் அதனை திருத்தியமைக்க வேண்டிய தேவை உணரப்பட்டது. அப்போதைய ஆணையாளர் முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்புகள் (திருத்தம்) சட்டத்தில் வரக்கூடிய திருத்தங்களை மேறகொண்டதன்; விளைவாக முதலாவது திருத்தம் 1962 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
1982 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க முஸ்லிம் பள்ளிவாயல்கள் அல்லது அறக்கட்டளைகள் அல்லது வக்பு சட்டம் மேலும் மாற்றங்களை செய்துள்ளது, குறிப்பாக வக்ப் சபையின் தீர்ப்புக்களிற்கு எதிரான மேன்முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் வக்பு நியாயசபை அறிமுகம்.
இது, ஒருங்கிணைந்ததோ ஒருங்கிணையாததோ, பள்ளிவாயல்கள், முஸ்லிம் சியாரங்கள் மற்றும் முஸ்லிம் சமய நிலையங்கள் போன்றவற்றை பதிவு செய்வதற்கான சட்டரீதியான வழிகாட்டல்களை வழங்குவதற்கான, பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்கள், முஸ்லிம் சியாரங்கள், சமய நிலையங்கள் மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைகள் அல்லது வக்புகளின் நம்பிக்கையாளர்களின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நிர்ணயிப்பதற்கான, முஸ்லிம் தரும நிதியமொன்றினையும்; வக்ப் சட்டத்தையும் நிறுவுவதற்கான மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களுடன் தொடர்பான விடயங்களுக்கு வழங்குவதற்கான ஒரு சட்டம்.