முஸ்லிம் தரும நிதியம்

முஸ்லிம் தரும நிதியம்
இலங்கை வக்பு சபையால் நிர்வகிக்கப்படுகின்ற ஒரு நிதியம் இருக்க வேண்டும் என முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்பு சட்டம் குறிப்பிடுகிறது. அதங்கேற்ப முஸ்லிம தரும நிதியம் நிறுவப்பட்டது மேலும் அனைத்து பள்ளிவாயல்கள், சியாரங்கள், அறக்கட்டளைகள் ஒவ்வொரு ஆண்டும் தமது தேறிய வருமானத்திலிருந்து பங்களிப்பு செய்ய வேண்டும். பள்ளியவாயல்களிலிருந்து 6மூ வீதமும் சியாரங்கள் மற்றும் அறக்கட்டளைகளிலிருந்து 10ம வீதமும் முஸ்லிம் தரும நிதியத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.

இலங்கை வக்பு சபை இந்நிதியத்தின் பணத்தினை பின்வரும் அனைத்து அல்லது ஏதேனும் நோக்கத்திற்காக முதலீடு செய்யலாம்;

• பள்ளிவாயல்களை கட்டுதல், புணரமைத்தல் மற்றும் பராமரித்தல்
• முஸ்லிம்கள் மத்தியில் வறுமை ஒழிப்பு
• முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம்
• பொதுவாக இஸ்லாத்தின் முன்னேற்றம்
• முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் வேறு ஏதும் நோக்கம்