2022 ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்காக முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

2022 ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்காக முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

 

கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடாத்தி வரும் கலாபூஷண விருதுவிழாவின் 38ஆவது கலாபூஷண விருதுவிழாவிற்காக முஸ்லிம் கலைஞர்களை தெரிவு செய்யும் பணி இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே இத்தெரிவினை மேற்கொள்ள மாவட்ட /பிரதேச செயலகத்தினூடாக இவ்விருதிற்கு தகுதியான 2022.12.15 திகதி 60 வயது பூர்த்தியாகின்ற கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை திணைக்களம் கோருகின்றது.

 

இவ்விண்ணப்பப்படிவத்தினை எமது இணையத்தளத்தில் https://muslimaffairs.gov.lk/en/downloads/applications/ மூலம் தரவிரக்கம் செய்து, விண்ணப்பப்படிவத்தினை பூர்த்திசெய்து *2022.11. 04* ஆம் திகதிக்கு முன் திணைக்களத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்குமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றேன்.

 

எமது மாவட்ட /பிரதேச செயலகத்திலுள்ள கள உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

 

இப்றாஹீம் அன்ஸார்

பணிப்பாளர்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்