
Closing Ceremony of the Second Holy Quran Memorization Final Competition
Closing Ceremony of the Second Holy Quran Memorization Final Competition
The grand closing ceremony of the Second Holy Quran Memorization Final Competition was held on the 20th of January 2025 at the prestigious Galle Face Hotel in Colombo. The event was a magnificent occasion, graced by distinguished dignitaries, including Hon. Dr. Hiniduma Sunil Senavi, Minister of Buddhasasana, Religious and Cultural Affairs, who attended as the guest of honor.
Adding to the event’s prestige, His Excellency Khalid Hamoud Al-Kahthani, Ambassador of the Kingdom of Saudi Arabia to the Republic of Sri Lanka, also graced the occasion.
Also present were His Excellency Saud Olaibi Alghamdi, Undersecretary to the Ministry of Islamic Affairs, Dawah, and Guidance, along with numerous ministers, members of parliament, and heads of diplomatic missions accredited to Sri Lanka.
During the ceremony, 24 outstanding students were honored for their remarkable achievements in Quran memorization, reflecting the competition’s mission to inspire and promote Quranic scholarship.
The event highlighted the collaborative efforts between the Royal Embassy of Saudi Arabia and the Department of Muslim Religious and Cultural Affairs in fostering religious education and cultural harmony in Sri Lanka.
Such initiatives demonstrate the enduring relationship between Sri Lanka and Saudi Arabia, emphasizing shared values, mutual respect, and cultural cooperation.
இரண்டாவது புனித அல்-குர்ஆன் மனன இறுதி போட்டியின் நிறைவுவிழா.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகமும். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய இரண்டாவது புனித அல்-குர்ஆன் மனன இறுதி போட்டியின் நிறைவுவிழா 2025.01.20 ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (Galle Face Hotel) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் Dr. ஹினிதும சுனில் சேனவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக சவூதி அரேபிய இராச்சியத்தின் இலங்கைக்கான தூதர் கெளரவ காலீத் ஹமூத் அல் கஹ்தானி, சவூதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் துணைச் செயலாளர் கெளரவ சவூத் ஒலய்பி அல் காம்தி, இலங்கையின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது, குர்ஆன் மனன இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய 24 மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் மூலம், அல்-குர்ஆன் மனனத் திறமையையும், அல்-குர்ஆனிய கல்வியில் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வின் மூலம் சவூதி அரேபிய தூதரகமும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சமய, கல்வி மற்றும் கலாசார ஒற்றுமையை மேம்படுத்துவதில் செய்யும் ஒத்துழைப்பு பாராட்டப்பட்டது.
இவ்வாறான நிகழ்வுகள் இலங்கை மற்றும் சவூதி அரேபிய இராச்சியம் ஆகியவற்றுக்கிடையிலான நிலையான உறவுகளைப் பிரதிபலிக்கின்றன.