பள்ளிவாயல்களை மீளத் திறத்தல்

27.05.2020

பள்ளிவாயல்களை மீளத் திறத்தல்

மக்களது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலில்லாத வகையில் பள்ளிவாயல்கள் மீளத் திறப்பது பற்றி சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களோடு இலங்கை வக்ப் சபை கலந்தாலோசித்து வருகிறது.

எனவே, வக்ப் சபையின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரும் வரையில் இந்த விடயத்தில் பொறுமை காக்குமாறு பள்ளிவாயல் நிர்வாகங்களும் பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஏ.பி. எம். அஷ்ரப்
பணிப்பாளர்/ வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்