உழ்ஹிய்யா 2020 – வக்ப் சபையின் பணிப்புரைகள்

23/07/2020

ஈதுல் அல்ஹா உழ்ஹிய்யாவின் போது பின்பற்ற வேண்டிய பணிப்புரைகளும் வழிகாட்டுதல்களும்.

1.உழ்ஹிய்யா மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகார சபையில் இருந்து எழுத்து மூலமாக தேவையான முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

2. குறித்த பகுதி PHI இடமிருந்து தேவையான முன் அனுமதி/ஒப்புதல் எழுத்து மூலமாக பெறப்பட வேண்டும்.

3. தேவைப்பட்டால் குறிப்பிட்ட பிரதேசத்திற்குறிய காவல் நிலையத்தில் இருந்து எழுத்து மூலமான ஒப்புதல் பெற்றுக் கொள்ளவேண்டும்.

4. உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் இடத்தில் பெற்றுக் கொண்ட அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் தொடர்பான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

5. உழ்ஹிய்யாவின் பின்னர் கழிவுகளை சுகாதாரமான மற்றும் அப்பகுதியின் PHI பரிந்துரைத்த முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

6. முழு செயல்முறையும் சூழவுள்ள மற்றும் பிற சமூகங்களுக்கு எவ்விதமான தீங்குகளோ தொந்தரவுகளோ அசௌகரியங்களோ ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

7. COVID-19ன் போது சுகாதார அதிகாரிகள் மற்றும் வக்பு சபை வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

வக்பு சபையின் அனுமதியுடன்,

ஏ பீ எம் அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மற்றும் வக்ஃப் சபை.