பள்ளிவாயல்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் பதிவு செய்தல்

12.05.2020

பள்ளிவாயல்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் பதிவு செய்தல்

பள்ளிவாயல்கள் சம்மேளனம் அல்லது பள்ளிக் கமிட்டி முதலான பெயர்களால் அழைக்கப்படும்பள்ளிவாயல்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் அமைப்புக்களையும்மு...தி.த்தில் பதிவுசெய்வதென இலங்கை வக்ப் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதன்மூலம் பள்ளிவாயல் சம்மேளனங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படுவதுடன் அவை சரியான முறையில்கட்டமைக்கப்பட்டு முஸ்லிம்  ..தி. உடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு, வக்ப் சட்டத்தின் நோக்கங்கள்அடையும்வகையில் சம்மேளனங்களை பல்படுத்தவுமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே, இத்தீர்மானத்திற்கு அமைய அத்தகைய பள்ளிவாயல் சம்மேளனங்கள் மற்றும் பள்ளிக் கமிட்டிகள்போன்ற சகல அமைப்புக்களும் 2020 ஆகஸ்ட் 10 ஆம் திகதி  அல்லது அதற்கு முன்னர் திணைக்களத்தில்பதிவுசெய்யுமாறு வக்ப் சபை இதன்மூலம் பணிக்கின்றது.

.பி. எம். அஷ்ரப்

வக்ப் சபை பணிப்பாளர் மற்றும்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்.