Covid19 ஐ வெல்லுவதோடு றமழானை பாதுகாப்பான முறையில் கடைப்பிடிப்போம்

25.04.2020

அன்பார்ந்த சகோதர சகாதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.

Covid19 ஐ வெல்லுவதோடு றமழானை பாதுகாப்பான முறையில் கடைப்பிடிப்போம்

இது உங்களுக்கு ஒரு நெருக்கடியான காலகட்டம் என்பதை நாம் அறிவோம். இந்த சோதனையான நிலைமையினால் நமது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை நமக்குள் பழக்கப்படுத்திக்கொள்ள நாம் இன்னமும் முயற்சிக்கிறோம். நமது பொது வாழ்வு, தொழில், பயணங்கள் போன்றவை நாம் நினையாவிதத்தில் பாதிப்படைந்துள்ளது. நீங்கள் இத்தருணத்தில் பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இருப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம். இது இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நமக்குத் தெரியாது, எனினும் இதிலிருந்து விடுபட நாம் ஒற்றுமைப் படவேண்டும்.

இக்காலகட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பின்பற்றாதவர்களை காணுவீர்கள், அப்படிப்பட்டவர்களை பின்பற்றாதீர்கள்; தயவு செய்து அரசாங்கத்தினால் கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த நோயானது இலகுவில் தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆகவே, நீங்கள் உங்கள் குடும்பத்தினரை இலகுவில் ஆபத்தில் தள்ளிவிடும் அபாயம் உள்ளது.

தேவையேற்படின் ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லவும். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் தேவையான அங்கீகரிக்கப்பட்ட அனுமதியுடன் மாத்திரம் வெளியில் செல்லவும். எக்காரணம் கொண்டும் அதனை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்.

நீங்கள் ஏதேனும் பள்ளிவாயல் அல்லது நிறுவனம் இந்த வழிகாட்டல்களை மீறுவதாக கண்டால் அதனை தடுக்க முயலுவதோடு அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவும்.

இந்த நோயில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும், இதிலிருந்து அனைவரையும் பாதுக்க்க முன்நின்று செயல்படுவதால் தங்களது உயிர்களை பணயம் வைத்துப் பாடுபடுபவர்களுக்காகவும், நமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நம்மருகில் கொண்டு வந்து சேர்க்கும் அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள்.

இந்த றமழான் பரக்கத் பொருந்தியதாக இருக்க பிரார்த்திக்கிறோம்.

றமழான் முபாரக்.

 

ஏ.பி.எம். அஷ்ரப்.
பணிப்பாளர்
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.