கொவிட்-19 கட்டுப்பாடுகள்- பள்ளிவாயலில் தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைத்தல்

28.10.2020

அனைத்தும் பள்ளிவாயல்களினதும் நம்பிக்கையாளர்கள்/நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கும்,

தொழுகைக்காக பள்ளிவாயல்களுக்கு சமுகமளிக்கின்ற சிலரது வசதியை கருத்திற்கொண்டு வைக்கப்பட்டிருக்கும் தொப்பிகளை பள்ளிவாயலுக்கு வருகின்ற பலரும் பாவிப்பதன் மூலம் கொவிட்-19 தொற்று பரவும் அபாயம் நிலவுகின்றது.

எனவே பள்ளிவாயலுக்கு சமுகமளிப்பவர்களின் பொதுப் பாவனைக்காக தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைப்பதை விட்டும் தவிர்ந்துகொள்ளுமாறு அனைத்துப் பள்ளிவாயல்களின் நிர்வாகிகளும் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.

ஏ.பீ.எம்.அஷ்ரப்
வக்ப் சபை பணிப்பாளர் (MMCT) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்