இலங்கை முஸ்லிம்கள்

 • முஸ்லிம்களின் வரலாறு
  இந்து சமுத்திரத்தில் ஆரம்பகால முஸ்லிம் வர்த்தகர்கள் என அரேபியர்களுடன் இணைத்து கருதப்படக் கூடிய பாரசீகர்கள் அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய பின்னர் குறுகிய காலத்தில் இஸ்லாத்தை ஏற்றனர். பல வர்த்தக மையங்களின் அமைவிடம் மற்றும் சார்பு முக்கியத்துவம் ஆகியவை பெரும்பாலும் இந்து சமுத்திரத்தின் பருவகாற்று முறைமையினால் தீர்மானிக்கப்படும். ஒரு பருவகால காற்றின் உதவியுடன் மாத்திரம் பாரசீக வளைகுடாவிலிருந்து சுமாத்ரா வரை பயணிப்பது சாத்தியமற்றதாகும். எனவே, கப்பல்கள் தமது பிரயாணத்தை இந்தியா அல்லது இலங்கை கடற்கரைகளில் இடைநிறுத்த வேண்டும்.
  கி.பி 7 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து வந்த காலப் பகுதியில் பாரசீகக் கப்பல்கள் இலங்கை கடற்கரையில் ஒரு விதிமுறையாகவே நிறுத்தப்பட்டன. கொஸ்மோஸ், மார்க்கோ போலோ போன்ற நாடுகாண் பயணிகளால் முன்வைக்கப்பட்ட சான்றுகளின்படி இந்து சமுத்திரப் பிராந்தியத்தல் முஸ்லிம்களின் ஆரம்ப கால வர்த்தகத்தில் பாரசீகர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை அறியலாம். இலங்கையானது பாரசீகர்களின் பிரதான வர்த்தக மையமாக இருந்து வந்தது. இம் முஸ்லிம் வர்த்தகர்களிடையே இலங்கையானது செரண்டிப், சீலான் என அறியப்பட்டது.

  கி.பி 1000 – 1500 வரையான காலப்பகுதியின் போது இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம்களின் செயற்பாடானது நாம் இன்று இலங்கையிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் காணப்படுகின்ற முஸ்லிம் குடியேற்றங்களின் தோற்றத்துடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. குடிவரவு மற்றும் மத மாற்றம் ஆகிய இரு காரணிகளே இப் பிராந்தியத்தில் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. போர்த்துக்கேயரின் இலங்கைக்கான வருகையின் போது இந்தியாவுடனான இந் நாட்டின் மொத்த வர்த்தகமும் முஸ்லிம்களால் கையாளப்பட்டது.

  16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இப் போர்த்துக்கேய ஆவணங்களில் மோரொஸ் என்ற பதம் முஸ்லிம்களைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட போதிலும் முஸ்லிம்கள் இரு பிரதான குழுக்களாக வகைப்படுத்தப்பட்டனர். இலங்கையை தனது தாய் நாடாகக் கருதியவர்களும் இலங்கையில் மிக நீண்ட காலமாக வசித்து வரும் முஸ்லிம்களும் முதலாம் குழுவில் உள்ளடங்குகின்றனர். அவர்கள் மோரொஸ் நச்சுரைஸ் அல்லது சுதேச முஸ்லிம்கள எனக் குறிப்பிடப்பட்டனர்.

  இரண்டாம் குழுவில் இரு நாடுகளுக்கிடையில் கப்பற் போக்குவரத்து வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளடங்குகின்றனர். இக்குழுவினர் ஒவ்வொரு வருடமும் பருவக்காற்றின் ஆரம்பத்தின் போது வந்து பருவகாற்றுக் காலம் முடியும் போது அல்லது அடுத்த வருடத்தில் செல்பவர்களாக இருந்தனர். இவ் ஒவ்வொரு வருகையின் போதும் தீவில் அவர்கள் சில மாதங்கள் தங்கி இருந்தனர் .

  காலப் போக்கில் அவர்கள் வர்த்தக ரீதியான உறவுகளைக் கட்டி எழுப்பினர்இ நண்பர்கள் மற்றும் சொத்துக்களைப் பெற்றுக் கொண்டனர் மற்றும் சிலர் இத் தீவில் உள்ள பெண்களை மணந்து குழந்தைகளையும் பெற்றுக் கொண்டனர். இக் குழுவினர் போர்த்துக்கேயர்களினதும் ஆரம்பகால பிரித்தானியர்களினதும் ஆவணங்களில் கரையோர முஸ்லிம்கள்’ எனக் குறிப்பிடப்பட்டனர். முஸ்லிம்களை அழைப்பதற்கு சிங்களவர்களால் பயன்படுத்தப்பட்ட ஹம்பயோ மற்றும் மரக்கல போன்ற சொற்கள் கடல்வழிப் போக்குவரத்து முஸ்லிம்களுடன் சிங்களவர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை காட்டுகின்றன. ஹம்பயோ – ஹம்பன் ஒரு வகைப் படகு மற்றும் மரக்கல படகோட்டி அல்லது மாலுமி எனப் பொருள் கொள்ளப்படும்.

  இவ்விரண்டாம் குழுவினர் இத்தீவில் தமது வாழிடத்தை நிரந்தரமாக அமைத்து கொண்டதன் விளைவாக 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்தது. போர்த்துக்கேய ஆவணம்(டொம்போ) ஒன்றில் உள்ள விரிவான சான்றுகளின்படி, இக் காலத்தில் புத்தளம், சிலாபம், மாதம்பை, நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, பேருவளை, மக்கொன்ன, பயாகல அளுத்கம, பெந்தொட்ட, காலி மற்றும் மாத்தறை போன்ற மேற்குக் கடற்கரைப் பிரதேசங்களில் கணிசமான அளவு முஸ்லிம்களின் குடியேற்றங்கள் காணப்பட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது.
  ‘இலங்கை முஸ்லிம்கள்’
  கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி

  முஸ்லிம்களின் கலாசாரம்
  கி.பி 7 ஆம் நூற்றாண்டுகளில் இத் தீவில் குடியேறிய முஸ்லிம்கள் அவர்களுடன் இஸ்லாம் மார்க்கம் மற்றும் இஸ்லாமிய வாழ்க்கை முறையைக் கொண்டு வந்தனர். எவ்வாறிருப்பினும் காலப் போக்கில் சுதேசியர்களை அவர்கள் திருமணம் செய்துகொண்டதனால் இஸ்லாமிய மற்றும் இஸ்லாம் மரபுகளையும் சுதேசிகளின் வாழ்க்கை முறையையும் பின்பற்றினர். இவ்வாறு இலங்கைக்கே உரித்தான பண்புசார் வாழ்க்கை முறை ஒன்றையும் வேறுபட்ட இஸ்லாமிய கலாசார அமைப்பு ஒன்றையும் நிறுவினார்.

  ஆரம்பத்தில் குடியேறியவர்கள் வர்த்தகர்களாக இருந்ததனால் அவர்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகப் பயன்படுத்தினர். இக் கால கட்டத்தின் போது தமிழ் மொழியானது வர்த்தகம் மற்றும் வணிக ஊடகமாக இருந்தது. பல அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதோடு தமிழ் மொழியானது அரபு எழுத்துக்களில் எழுதப்படத் துவங்கியமையானது ‘அரபுத் தமிழ்’ எனும் பதத்திற்கான தோற்றத்தைக் கொடுத்தது இன்றுவரை புகழ்பெற்று விளங்கும் பல இலக்கிய வேலைகள் மற்றும் பாராயணங்கள் அரபுத் தமிழில் இயற்றப்பட்டுள்ளன.

  தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களில் இருந்த பல பழக்கவழக்கங்கள் பின்பற்றப்பட்டதோடு அவை இன்றுவரை நடைமுறையில் உள்ளன. மலை நாட்டிற்;கு இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் சிங்களவர்கள் பெயர்களில் இருப்பது போன்றும் ‘கே’ எனும் பின்னொட்டை தமது பெயர்களில் பயன்படுத்தினர். மேலும்இ திருமண வைபவங்களின் போது தாலி (மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் கழுத்தணி) தமிழர்களின் ‘மணவறை’ அல்லது சிங்களவர்களின் ‘போருவ’ ஆகியவற்றுக்கு நிகரான மணமேடைகள் கண்திருஷ்டியைப் போக்குவதற்கான ‘ஆலாத்தி’ ஆகியவை இச் சமூகங்களில் இருந்து பெறப்பட்ட பழக்க வழக்கங்கள் ஆகும்.

  முஸ்லிம் சமூகமானது இந் நாட்டில் குடியேறிய அரேபியர்களின் வழித்தோன்றல்களை மாத்திரம் கொண்டிருக்கவில்லை. பிற்பட்ட காலங்களில் பல முஸ்லிம் குடியேற்றவாசிகள் இந்தியா மற்றும் மலாயன் பிரதேசங்களில் இருந்து வந்தனர். இவ்வாறு குடியேறிய முஸ்லிம்களின்; பலதரப்பட்ட வழித்தோன்றல்கள் மற்றும் அவர்கள் கொண்டுவந்த மரபுகளுடன் இணைந்து அவர்கள் குடியேறிய பிரதேசங்களில் நடைமுறையிலிருந்த பழக்கவழக்கங்களின் பின்பற்றல் ஆகியவை இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தின.
  • ‘சுதந்திர இலங்கையில் இஸ்லாம்’ திருமதி மரீனா இஸ்மாயில்

  முஸ்லிம் பெண்கள்
  20 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றே முஸ்லிம் பெண்களின் மீதான மனப்பாங்காகும். முஸ்லிம் பெண்கள் மரபு ரீதியாக இருந்து வந்த இல்லத்தரசி மற்றும் தாய் என்ற வகிபாகங்களிலிருந்து கல்வி கற்றவர்களாகவும் விடுவிக்கப்பட்டவர்களாகவும் மாறினார். தற்பொழுது அவர்களில் பலர் வெற்றிகரமான வைத்தியர்கள்இ வழக்கறிஞர்கள், கல்வியலாளர்கள் மற்றும் கணக்காளர்களாக உள்ளனர். சிலர் நிர்வாகம் மற்றும் சிவில் சேவைகளில் பதவிகளை வகிப்பதோடு சிலர் வெற்றிகரமான முயற்சியாண்மையாளர்களாகவும் உள்ளனர். மேலும்இ சிலர் அரசியலில் பிரவேசித்து இருப்பதோடு திருமதி ஆயிஷா ரவூப் என்பவர் கொழும்பு மாவட்டத்தின் பிரதி மேயராகவும் உள்ளார்.

  எவ்வாறிருப்பினும், குர்ஆனை வாசித்தல் மற்றும் பாராயணம் செய்தல் என்பன பெண் பிள்ளைகளுக்கான பயிற்சியில் முக்கியமான ஒரு பகுதியாக இருந்தது. பெண் பிள்;ளைகளின் கல்வியை நோக்கிய மனப்பாங்கு மாற்றத்தின் விளைவாக 1930களில் கல்வி மீதான நாட்டம் ஒன்று ஏற்பட்டது. 1936 ஆம் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடானது சமூக மேம்பாட்டின் ஒரு வளர்ச்சிப் படியாக பெண்களின் கல்வியின் முக்கியத்துவத்திற்கு அழுத்தம் ஒன்றைக் கொடுத்தது. 1943 ஆம் ஆண்டில் சேர். ராசிக் பரீத் அவர்கள் முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு பாடசாலை ஒன்றை நிறுவுமாறு கேட்டுக்கொண்டார். வேலைவாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஆங்கிலக் கல்வியின் அவசியம் இக்காலகட்டத்தில் உணரப்பட்டது. அதன் தாக்கங்கள் முஸ்லிம் பெண் பிள்ளைகளின் கல்விக்கு வழங்கப்பட்ட பிரசித்தம் ஆகியவற்றினால் இக்காலகட்டம் பொருத்தமானதாக காணப்பட்டது.
  தற்காலத்தில் இலங்கை முஸ்லிம் பெண்கள் வெறுமனே சிறந்த இல்லத்தரசி யாகவும் தாயாகவும் இருப்பதில் மாத்திரம் திருப்தி கொள்வதில்லை. அவர்கள் தனது குடும்பத்திற்கு மேலதிகமான வருமானத்தை வழங்கக் கூடிய தொழில் ஒன்றையோ அல்லது தனக்கு திருப்தியளிக்கும் தொழில் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக சமுதாயத்தில் குறைந்த மாறாக சமுதாயத்தால் குறைந்தவருமானத்தைக் கொண்ட தரப்பினர்களுக்கு உதவுவதற்காக அமைப்புக்களுடன் இணைந்துள்ளனர்.
  • ‘சுதந்திர இலங்கையில் இஸ்லாம்’ திருமதி. மரீனா இஸ்மாயில்

  முஸ்லிம்களின் கல்வி
  1948 ஆம் ஆண்டு சுதந்திர காலப் பகுதியில் முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய கல்வியானது நல்ல நிலையில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்வியில் காணப்பட்ட மோசமான பின்னடைவு போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தர் ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட மோசமான அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அதனைத் தொடர்ந்துவந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் தம்மை மதம் மாற்றி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக பிரதானமான ஆங்கில மொழிக் கல்வியைக் கற்பதில் முஸ்லிம்கள் கொண்டிருந்த விருப்பமின்மை ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டதாகும்.

  காலப்போக்கில் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தேசிய கல்வி முறைமையில் பங்குபற்றுவது கட்டாயமானதாகும் என்பதை சமூகத் தலைவர்கள் உணர்ந்து கொண்டார்கள். முஸ்லிம் சமூகத்தினர் பொதுக் கல்வி மற்றும் மார்க்க கல்வியில் முன்னேறிக்கொண்டு இருந்தார்கள் என்பது இந்நூற்றாண்டின் பிறப்புடன் உதயமான சிந்தனை கண்டறிந்தது.
  1. அஹதியாப் பாடசாலைகள் (மக்தப் என அழைக்கப்படுகின்றன)
  2. அரபுக் கல்லூரிகள்
  3. குர்ஆன் மத்ராசாக்கள்
  4. இஸ்லாமிய பாலர் பாடசாலைகள்
  5. முஸ்லிம் பாடசாலைகள்
  6. பல்கலைக்கழகங்கள்

  1900 – 48 வரையான காலப் பகுதியில் இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. முஸ்லிம் மத்தியதர வகுப்பு ஒன்று மெதுவாகத் தோற்றம் பெற்றுக்கொண்டு இருந்தது. தமது மரபுகள் மற்றும் பெறுமானங்களை இழக்காத வகையில் ஆங்கிலக் கல்வியைப் பெற விரும்பும் முஸ்லிம்களின் ஒரு தொகுதியினரை இது நடைமுறைக்குக் கொண்டுவந்தது. எனவே, சித்திலெப்பை, வாப்பிச்சி மரிக்கார் மற்றும் எகிப்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஒராபி பாஷா போன்ற சமூகத் தலைவர்களின் தூண்டுதலினால் பொதுக் கல்விக்கு மேலதிகமாக இஸ்லாமியக் கல்வியை இயக்குபவர்களாகவும் முஸ்லிம் பாடசாலைகளின் தலையீடுகளினாலும் காலப்போக்கில் முஸ்லிம்கள் பிரதான கல்வித் துறையில் பிரவேசித்தனர்.;

  அரசாங்கக் கல்விக் குழுவில் ஏ.ஆர்.ஏ ராசிக்(பின்னர் சேர்.ராசிக் பரீத்) மற்றும் ரி.பீ ஜாயா ஆகியோர் இடம்பெற்றிருந்தமை உந்துசக்தியாக அமைந்தது. முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் அதிகமான அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டன, அதிகமான முஸ்லிம்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்இ ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கல்லூரிகள் நிறுவப்பட்டன, அறபு மற்றும் இஸ்லாம் ஆகிய பாடங்களில் அறிவுறுத்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன மற்றும் அப்பாடங்களுக்கான விசேட பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

  1956 ஆம் ஆண்டின் அமைதிப் புரட்சியுடன் முஸ்லிம்களின் கல்வியில் மறுமலர்ச்சி உதயமாகியது. எஸ்.டப்ளியு.ஆர்.டீ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி.டப்ளியு தஹநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி.பதியுதீன் மஹ்மூத் ஆகியோரே பாடசாலை முறைமையின் ஊடாக முஸ்லிம் மற்றும் இஸ்லாமிய கல்வியை ஊக்குவித்தவர்களாக இருந்தனர்.
  • ‘சுதந்திர இலங்கையில் இஸ்லாம்’
  திரு.எஸ்.எச்.எம் ஜமீல்

  முஸ்லிம் சனத்தொகை
  • சனத்தொகைப் பரம்பல் – 2012 (இனம் மற்றும் மதம்)

  http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2012Visualization/htdocs/index.php?usecase=indicator&action=Map&indId=11#மூலம்: தொகை மதிப்பு மற்றும் புள்ளவிவிபரத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம்

  • மாவட்ட ரீதியான சனத்தொகை – 2012 (மதம்)
  http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop43&gp=Activities&tpl=3
  மூலம்: தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம்

  • பிரதேச செயலக ரீதியிலான சனத்தொகை – 2012 (மதம்)
  http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop33&gp=Activities&tpl=3
  மூலம்: தொகை மதிப்பு மற்றும் புள்ளவிவிபரத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம்

  • முஸ்லிம் இணையதளங்கள்